சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக் என்பவர் வாகன விபத்து தொடர்பாக, கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் உள்ள அவரது இன்னோவா காரை விடுவிக்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, கரூர் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மறைந்திருந்தனர். அங்கு, 15 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை அபிஷேக் வழங்கியபோது, வேலாயுதம்பாளையம் தலைமைக் காவலர் செந்தில்குமார் கையும் களவுமாக பிடிபட்டார்.