சென்னையில் மயிலாப்பூர், புரசைவாக்கம், அண்ணா நகர் போன்ற இடங்களில் செயல்பட்டுவருகிறது கே.எஃப்.ஜே எனப்படும் ’கேரளா ஃபேஷன் ஜுவல்லரி’. இந்த நகைக்கடையில் ’ஜிஎல் ப்ளஸ்’ என்ற, 1999 ரூபாய் செலுத்தும் தங்க நகை சேமிப்புத் திட்டத்தில் பொதுமக்கள் பலர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். மேலும், பலர் பழைய தங்க நகைகளை கொடுத்துவிட்டு புதிய தங்க நகைகளாக மாற்றும் திட்டத்திலும் இணைந்தனர். இந்தத் திட்டங்களில் கடந்த பல மாதங்களாக பொதுமக்கள் கோடிக்கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர்.
இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளம்பரத் தொகை கடன் 10 கோடி ரூபாய் தராத பிரச்னையில், நிறுவனத்தின் பங்குதாரர் சுனில் செரியன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சீட்டு கட்டிய பலருக்கும் முதிர்வு தொகைக்காக வழங்கப்பட்ட காசோலைகள், கே.எஃப்.ஜே வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திருப்பி வந்ததால் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் நகையையாவது பெற்றுக் கொள்ளலாம் என்று கே.எஃப்.ஜே கடைக்குச் சென்ற பலரும் கடை மூடி இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், சென்னைக் காவல் ஆணையர் அலவலகத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் இன்று வந்தனர். மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கே.எஃப்.ஜே நகைக்கடை மோசடிக் குறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகக் கூறினர். மேலும், கே.எஃப்.ஜேயில் நாங்கள் செலுத்திய பணம் மற்றும் நகைகளை மீட்டு தரக்கோரி கேட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
கே.எஃப்.ஜே நகை சேமிப்புத் திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இதையும் படிங்க: 'ஸ்பாட் ஃபைன்' திட்டத்தில் மோசடி - சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு