தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

வேலூரில் அடுத்தடுத்து மூன்று கொலை: 7 பேரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை - Seven people under inquired

வேலூர்: அடுத்ததடுத்து மூவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஏழு பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

வேலூரில் அடுத்தடுத்து மூன்று கொலை; 7 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை !
வேலூரில் அடுத்தடுத்து மூன்று கொலை; 7 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை !

By

Published : Dec 9, 2020, 2:18 PM IST

வேலூர் மாவட்டம் அரியூர் திருமலைக்கோடியைச் சேர்ந்தவர் காமேஷ் (29), அரியூர் முருக்கேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் திவாகர் (25), தணிகைவேல் (26). இதில் தணிகைவேல் சென்னை புழல் சிறையில் வார்டனாகப் பணியாற்றிவந்தார்.

இந்நிலையில் நேற்று (டிச. 09) இரவு அடையாளம் தெரியாத கும்பல் திவாகர், தணிகைவேல் ஆகிய இருவரையும் ஜி.ஆர். பாளையத்தில் வைத்தும், காமேஷை ஶ்ரீபுரத்தில் உள்ள நாராயணி நர்சிங் கல்லூரி முன்பாகவும் வைத்தும் கொலைசெய்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து அரியூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேரைப் பிடித்துள்ளனர். இவர்களில் ராஜா என்கிற எம்எல்ஏ ராஜா, சேம்பர் ராஜா ஆகியோர் முக்கியக் குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஷோக் குமார் என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் எம்எல்ஏ ராஜா கொலைசெய்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் கைதாகி சிறைசென்று சமீபத்தில் விடுதலையான ராஜா தன்னை அஷோக் குமாரின் நண்பரான காமேஷ் கொலை செய்துவிடுவார் என்று அச்சத்தில் இந்த மூவரையும் கொலைசெய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரியூர் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இறந்தவர்களின் உடல் உடற்கூராய்விற்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க...பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details