புதுப்பேட்டை மாநகராட்சி அலுவலகத்தில் உதவிப் பொறியாளராக பணியாற்றுபவர் காட்லின் வெல்வா (33). இவர் நேற்று எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது வாகன ஓட்டுநரான துரைக்கண்ணு வாகன பராமரிப்பு தொடர்பாக தன்னிடம் நீண்ட நாளாக பிரச்சனை செய்து வந்ததால் வேலையை விட்டு போகச்சொல்லியும், தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தொழிற்சங்க செயலாளராக இருப்பதாகக் கூறி, தன்னை மிரட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று காலை அலுவலகத்திற்கு செல்ல வாகனத்தை இயக்கும் போது, முகக்கவசம் அணியக் கூறியதால் தன்னிடம் தகராறு செய்ததுடன், பின்னர் தனது கட்சியை சேர்ந்த வெங்கடேஷ், செல்வா உட்பட 5 பேரை அழைத்து வந்து ஆபாசமாக பேசியும், கன்னத்தில் அறைந்து தாக்கியதாக புகாரில் காட்லின் வெல்வா குறிப்பிட்டுள்ளார்.