காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் மணிகண்டன் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்(38). இவர் அதேப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் இன்று காலையில் இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகத்தில் வந்த வேன் கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.
வேன் மோதி தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு - Accident in kuntrathur
காஞ்சிபுரம்: குன்றத்தூரில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.
விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம்
இந்த விபத்தில் ஜெகதிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தில் இறந்த ஜெகதீஷூக்கு முதலுதவி அளிக்க சரியான நேரத்தில் காவல்துறையினர் வரவில்லை எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.