தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

7 ஆண்டுகளாக போலிச் சான்றிதழ்கள்; சிக்கிய கும்பல்! - வடோதரா போலி சான்றிதழ்கள்

வடோதராவில் 7 ஆண்டுகளாக பல பல்கலைக்கழகங்கள் பெயரில் போலி மதிப்பெண் சான்றிதழ்களை தயாரித்து வந்த கும்பலை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பல்கலைக்கழக பட்டங்களையும் இவர்கள் தயாரித்து விற்றுவந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Vadodara marksheet scam, Vadodara Police busted a gang, vadodara fake mark sheets and degrees, போலி சான்றிதழ்கள், வடோதரா போலி சான்றிதழ்கள், வடோதரா போலி பட்டங்கள்
Vadodara marksheet scam

By

Published : Nov 28, 2020, 12:02 PM IST

வடோதரா (குஜராத்): போலி சான்றிதழ்கள் தயாரித்து விநியோகம் செய்துவந்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத்தின் வடோதரா பகுதியில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் போலியான மதிப்பெண் சான்றிதழ்களையும், பட்டங்களையும் கும்பல் ஒன்று தயாரித்து வழங்கி வந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், குற்றச்சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர்.

வடோதரா கோர விபத்து: குழந்தை உள்பட 11 பேர் உயிரிழப்பு!

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், 7 ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. அந்தக் கும்பலிடமிருந்து, போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்க உதவிய 3 கணினிகள், மின்னணுப் பொருள்கள் போன்றவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

போலி பல்கலைக்கழக பட்டங்கள்

போலியான சான்றிதழ்களையும் கைப்பற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து, அந்தப் பல்கலை கழகங்களில் பணிபுரிபவர்கள் யாரேனும் இந்தக் கும்பலுடன் தொடர்பில் உள்ளனரா என்பது குறித்தும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலி மதிப்பெண் சான்றிதழ்கள்

ABOUT THE AUTHOR

...view details