உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூர் பகுதியைச் சேர்ந்த சீமா பாய்க்கும் ஆரிஃப்புக்கும் இடையே கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்நிலையில் ரூ.10 லட்சம் வரதட்சணை மற்றும் பொலிரோ கார் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என ஆரிஃப் குடும்பத்தினர், சீமா பாயைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதற்கிடையில் ஆரிஃப், சீமா பாயிடம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.
இதனால் வேறு வழியின்றி அப்பெண் உடலில் தீ வைத்துக்கொண்டார். தற்போது அவர் உடல் முழுக்கத் தீக்காயங்களுடன், மொராதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரின் நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவர் முத்தலாக் கூறியதால் மனைவி தீக்குளிப்பு
லக்னோ: கணவர் முத்தலாக் கூறியதால் இளம்பெண் தீக்குளித்தார். அவருக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
UP woman burnt alive over dowry by husband, in-laws
இதையடுத்து சீமா பாயின் சகோதரர் ஆசிம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் ஆரிஃப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒமர் அப்துல்லா வீட்டுச் சிறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு
Last Updated : Feb 10, 2020, 4:34 PM IST