உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் விமான நிலையம் அருகே கடந்த 22ஆம் தேதி சிறுமி ஒருவரை அவரது தந்தை படுகாயங்களுடன் மீட்டுள்ளார்.
உடனடியாக அவரை மீரட் மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சைக்காக சிறுமியின் தந்தை அனுமதித்துள்ளார். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் மொராதாபாத் காவல்துறையினர் போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376இன் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.