தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

உபியில் தொடரும் கொடூரம்: வழக்கறிஞர் சுட்டுக் கொலை! - உபியில் தொடரும் கொடூரம்

உத்திர பிரதேச மாநிலத்தில் இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர், வழக்கறிஞரை சுட்டுக் கொலைசெய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஆக்ரா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

UP lawyer shot dead by unidentified assailants
UP lawyer shot dead by unidentified assailants

By

Published : Dec 20, 2020, 11:02 AM IST

ஆக்ரா (உத்திர பிரதேசம்):வழக்கறிஞரை சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற இருவரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் தாஜ் நகர் காவல் எல்லைக்குட்பட்ட ஷாஹீத் நகர் பகுதியில், இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர், வழக்கறிஞரை சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். சுடுபட்டு கிடந்த அவரை, பொது மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் அந்த இடத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஷ் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது உடலில் இரண்டுக்கு மேற்பட்ட குண்டுகள் துளைத்திருந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கொலை நடந்த இடத்திலிருந்த கண்காணிப்புப் படக்கருவிகளைக் கொண்டும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தப்பியோடிய இருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details