லக்னோ:உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் திராவகம் வீசி தாக்குதல் நடத்தியதில் மூன்று இளஞ் சகோதரிகள் காயமுற்றனர்.
இந்தச் சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பொருளாதார உதவிகள் அளித்து, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சைலேஷ் குமார் பாண்டே கூறுகையில், “வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது இந்தச் சிறுமிகள் அமிலத் தாக்குதலை எதிர்கொண்டுள்ளனர். ஒரு சிறுமிக்கு 30 விழுக்காடும், இதர சிறுமிகளுக்கு 20 முதல் 7 விழுக்காடும் அமிலக் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் சிறுமிகளுக்கு ஒருவருக்கு 17 வயதும், இதர சிறுமியருக்கு 7 முதல் 5 வயது வயது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடக்கிறது.
இதையும் படிங்க: திருமணத்துக்கு மறுத்த இளைஞர் மீது திராவகம் வீசிய காதலி!