வேலூர் மாவட்டம் ஏலகிரி மலைப்பகுதியைச் சேர்ந்தவர் பவானி. இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இவரைப் பார்ப்பதற்காக பவானியின் மருமகன் முருகன் உள்ளிட்ட உறவினர்கள் கடந்த 15ஆம் தேதி மருத்துவமனைக்கு வந்தனர். நோயாளியுடன் தங்குவதற்கு ஒருவரைத் தவிர யாருக்கும் அனுமதி இல்லாததால், மீதமுள்ள நான்கு பேர் வார்டுக்கு வெளியே தூங்கினர்.
மருத்துவமனையில் நோயாளியைப் பார்க்க வந்தவரின் செல்போன் திருட்டு - ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை
சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளியைப் பார்க்க வந்த நபரிடம் பணத்தைத் திருடியவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இந்நிலையில், அதிகாலை மூன்று மணிக்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த முருகனுக்குப் பக்கத்தில் சென்று ஒருவர் படுத்துள்ளார். பின்னர் முருகனின் பையில் இருந்த 20 ஆயிரம் மதிப்பிலான செல்போன், 15 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை அவர் திருடிச் சென்றுள்ளார். இந்தக் காட்சிகள் அனைத்தும் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. பணம், செல்போன் திருடுபோனதை அறிந்து மருத்துவமனை காவல் நிலையத்தில் முருகன் புகார் கொடுத்தார். பின்னர் இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் திருடனைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: இளம்பெண் என நினைத்து மூதாட்டியிடம் அத்துமீறிய போதை ஆசாமி!