தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் உடல் கண்டெடுப்பு! - unknown murdered body found in theni

ஆண்டிபட்டி அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் அடையாளம் தெரியாத நபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடலில் பல்வேறு இடங்களில் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி கொடூர கொலை, theni murder, unknown murdered body found in theni, தேனி அடையாளம் தெரியாத உடல்
theni murder

By

Published : Nov 20, 2020, 12:50 PM IST

தேனி: உடலின் பல்வேறு இடங்களில் கொடூரமாக அறுக்கப்பட்டு கிடந்த பிணத்தை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா திம்மரசநாயக்கனூர் கிராமத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். மதுரை – தேனி தேசிய நெஞ்சாலையின் ஓரத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், உடலில் காயங்களுடனும், ஆசனவாயில் கத்தியை சொருகப்பட்டவாறு ரத்த வெள்ளத்தில் கிடந்த சுமார் 45வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கண்ட பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

வண்டி சக்கரத்தில் மயங்கி விழுந்த முதியவர்: சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்!

உடனடியாக இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் இடம் விரைந்த காவல் துறையினர் உடலைக் கைபற்றி ஆய்வு செய்தனர். பின்னர் உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல் துறையினர், இறந்தவர் யார் என்பது குறித்தும், கொலை செய்த நபர்கள் யார்; இந்த கொடூர கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கொடூரமான முறையில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details