வாணியம்பாடி வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் இஸ்மாயில் (75). இவர் நேற்றிரவு அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த மர்மநபர்கள் அவரிடம் முகவரி கேட்பது போல் இரும்பு கம்பியால் தலையில் தாக்கி அவரிடம் இருந்த செல்ஃபோனை பறித்துச் சென்றுள்ளனர்.
முகவரி கேட்பது போல் முதியவரை தாக்கி செல்ஃபோன் பறிப்பு! - வாணியம்பாடி
திருப்பத்தூர்: சாலையில் நடந்து சென்ற முதியவரை தாக்கி செல்ஃபோன் பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

attacked
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் தலையில் காயத்தோடு கீழே விழுந்த முதியவர் இஸ்மாயிலை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இஸ்மாயில் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி நகர காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: காவல்துறையினர் போல் நடித்து வீடு புகுந்து கொள்ளை!