ஈரோடு:அரியப்பம்பாளையத்தில் வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டியதில் வனச்சரக வாகன ஓட்டுநர் படுகாயமடைந்தார்.
வீடு புகுந்து வனச்சரக ஓட்டுநரை வெட்டிய அடையாளம் தெரியாத கும்பல்! - வனச்சரக ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
வனச்சரக வாகன ஓட்டுநர் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்துள்ளனர். சற்றும் எதிர்பாராத சூழலில், அந்த கும்பல் ஓட்டுநரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
mob attacked government servant
ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையம் செங்குந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த சஜீவன்(40) என்பவரது வீட்டில் அடையாளம் தெரியாத கும்பல் நுழைந்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது. இதில் சஜீவன் ரத்தக் காயங்களுடன் சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இவர் சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகத்தில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.