சென்னை அடுத்த பழைய தாம்பரம் பகுதியில் விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான குளம் ஒன்று உள்ளது. இந்நிலையில், வழக்கம்போல் அர்ச்சகர்கள் கோயிலை திறக்க சென்றனர். அப்போது கோயில் குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக தாம்பரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்தக் காவல்துறையினர், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.