தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

என்னடா இது தோழா நாகர்ஜூனாவுக்கு வந்த புது தலைவலி! - தோழா

தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவுக்கு செந்தமான பண்ணை வீட்டில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nagarjuna

By

Published : Sep 19, 2019, 11:40 PM IST

தமிழில் 'ரட்சகன்', 'தோழா' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானவர் நாகர்ஜூனா. இவர் தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'மன்மதடு 2' படம் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து தனது குடும்பத்தினருடன் தனது பிறந்த நாளை ஸ்பெயினில் கொண்டாடிய நாகர்ஜூனாவின் புகைப்படத்தை அவரது மருமகளும் நடிகையுமான சமந்தா தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இவருக்கு சொந்தமாக தெலங்கானாவில் உள்ள பாப்பிரெட்டிகுடா என்ற கிராமத்தில் பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீடு நீண்டகாலமாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வந்தது.

அழுகிய நிலையில் கிடந்த சடலம்

இந்நிலையில், இந்த வீட்டை சுத்தம் செய்ய நேற்று பணியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் கேஷாம் பேட் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து நிகழ்விடத்திற்கு மோப்ப நாய்களுடன் வந்த காவல் துறையினர், சந்தேகத்துக்குரிய மரணமாக வழக்குப்பதிவு செய்து அந்த உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர். எனினும் உடற்கூறாய்வின் அறிக்கை வந்தபின்னரே இது கொலையா தற்கொலையா என முடிவு செய்யப்படும் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details