சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே திருமணிமுத்தாறு பாய்கிறது. இன்று மாலை 5 மணி அளவில் இந்த ஆற்றில் சடலம் ஒன்று மிதந்ததைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே பொதுமக்கள் சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில், அங்கு வந்த காவல் துறையினர் மிதந்த உடலை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது அங்கு உயிரிழந்தவருக்கு 50 வயது இருக்கும் என்றும்; அவரின் உடலில் சில பகுதியில் லேசான காயம் இருந்தது என்றும் தெரியவந்தது. இதனால் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.