ராயப்பேட்டை லாயிட்ஸ் சந்திப்பு அருகே, காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர் செல்ஃபோன் பறிப்பு - இருவர் கைது - செல்போன் பறிப்பு
சென்னை: தொடர் செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அதில், ஐஸ் அவுஸ் பகுதியைச் சேர்ந்த முனீர் பாஷா, ரோட்டரி நகரைச் சேர்ந்த ரியாஷ் பாஷா என்பது தெரிய வந்தது. அவர்களின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில், 2 செல்ஃபோன்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இரு சக்கர வாகனத்தை வைத்து செல்ஃபோன் வழிப்பறியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து இருசக்கர வாகனம், செல்ஃபோன்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், இரண்டு பேரையும் கைது செய்து, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: செல்ஃபோன் பறிப்பில் ஈடுப்பட்ட 3 பேர் கைது