தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

ஐபில் சூதாட்டம் : தற்கொலை முயற்சியில் இளைஞர் உயிரிழந்த பரிதாபம்! - andra ipl betting suicide

ஆந்திர மாநிலம், குண்டூரில் ஐபிஎல் போட்டி சூதாட்டத்தில் பணத்தை இழந்த இரண்டு இளைஞர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மற்றொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

TWO YOUNGSTERS commits suicide IPL BETTING
TWO YOUNGSTERS commits suicide IPL BETTING

By

Published : Nov 11, 2020, 2:18 PM IST

குண்டூர் (ஆந்திரப் பிரதேசம்): ஐபிஎல் போட்டி சூதாட்டத்தில் பணத்தை இழந்த இரண்டு இளைஞர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தின் பெடகுராபாடு மண்டலத்தின் டல்லூரு கிராமத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. சூரேஷ், கோமராயா ஆகிய இரண்டு இளைஞர்களும் ஐ.பி.எல் கிரிக்கெட் பந்தய சூதாட்டத்தில்பணத்தை இழந்து தற்கொலை செய்வதற்கான முடிவை எடுத்துள்ளனர்.

தற்கொலை தீர்வல்ல

அதன்படி, மதுபானத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து இருவரும் குடித்துள்ளனர். அதில் ஒருவர் இறந்த நிலையில், மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐபில் சூதாட்டத்தில் ஈடுபட்டு, பணத்தை இழந்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் : ஒருவர் உயிரிழப்பு

இருவரும் இறப்பதற்கு முன் காணொலி ஒன்றைப் பதிவு செய்திருந்தனர். அதில், ”கிரிக்கெட் சூதாட்டத்தில் தோல்வியடைந்தோம். தற்போது பந்தய மேலாளர் பணத்திற்காக அழுத்தம் கொடுத்தார். எனவே இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details