தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

'என் வண்டியைத் திருடுனது இவர்தாங்க...' - திருடியவரை போலீசிடம் ஒப்படைத்த பாதிக்கப்பட்டவர்! - இருசக்கர வாகனத் திருட்டு

சென்னை: பெரியமேட்டில் வசிக்கும் நபர், தனது இருசக்கர வாகனத்தைத் திருடி சென்ற நபரை சிசிடிவி உதவியுடன் கண்டறிந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

ஜெயகாந்தன்
ஜெயகாந்தன்

By

Published : Jul 5, 2020, 2:35 AM IST

சென்னை பெரியமேடு பெரியண்ணா மேஸ்திரி தெருவில் வசித்து வருபவர் சபீக் அகமத்(39). இவர் தனது வீட்டருகே இருசக்கர வாகனத்தை கடந்த 1ஆம் தேதி இரவு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் காலையில் எழுந்து பார்க்கும்போது நிறுத்தி வைத்திருந்த வாகனம் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியை ஆய்வு செய்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மாடு இறைச்சி விநியோகம் செய்யும் வாகனம் ஒன்றில் வாகனத்தைத் திருடி ஏற்றி செல்வது பதிவாயிருந்தது.

சிசிடிவி காட்சிகள்
இதனால் உடனடியாக அருகிலிருந்த மாடு இறைச்சி கடை வியாபாரியிடம் விசாரித்த போது வேலூர் மாவட்டம் பேராணம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன் (32) என்பவர், அங்கிருந்து மினி வேன் மூலம் மாடு இறைச்சியை சென்னைக்கு விநியோகம் செய்யும் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது.
பைக் திருடன் ஜெயகாந்தன்

மேலும் ஜெயகாந்தனின் செல்போன் எண்ணை வாங்கி , சபீக் அகமது பேசியபின் இருசக்கர வாகனத்தை திருடியதை ஒப்புகொண்ட அவர், நேற்று காலை சபீக்கிடம் அவரது வண்டியை ஒப்படைத்துள்ளார். ஆனால், ஜெயகாந்தனை சபீக் பெரியமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதனால் பெரியமேடு காவல் துறையினர் இருவரிடமும் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:குடும்ப தகராறு காரணமாக குழந்தையுடன் தாய் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details