தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத உடல்கள் மீட்பு! - கிணற்றில் அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்பு

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே அடையாளம் தெரியாத இரு உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன.

two unidentified corpses found at thirukovilur

By

Published : Oct 29, 2019, 11:20 PM IST

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிப்புரம் என்னும் பகுதியில் உள்ள பாரத் பெட்ரோலியம் எதிரே பிச்சாண்டி என்ற நபருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் கிணறு ஒன்று உள்ளது.

அந்தக் கிணற்றில் அடையாளம் தெரியாமல் உடல் அழுகிய நிலையில் இரண்டு சடலங்கள் மிதப்பதாக கண்டாச்சிப்புரம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான காவல் துறையினர் அங்குச் சென்று பார்த்தபோது, 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் ஒன்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தையும் அடையாளம் காணமுடியாத அளவிற்கு உடல் அழுகிய நிலையில் கிணற்றில் சடலமாக கிடப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சடலங்களை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்த கண்டாச்சிப்புரம் காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.

அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்பு


இதையும் படிங்க: பொய்யான புகாரினால் சிறை சென்ற பெண் வேதனை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details