திண்டுக்கல் மாவட்டம், தாமரைபாடி அருகேயுள்ள சாலை ஊரைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் தமிழ்ச்செல்வன் (15) 10ஆம் வகுப்பு படித்து வந்தார். அவரது உறவினரான கண்ணன் என்பவரது மகன் சரத்குமார் (14). இந்நிலையில், தொலைக்காட்சியை பழுது பார்ப்பதற்காக தாமரைப்பாடிக்கு சென்றுவிட்டு தமிழ்ச்செல்வன், சரத்குமார் இருவரும் தனித்தனி மிதிவண்டியில் வீடு திரும்பினர்.
சரக்கு வேன் மோதி 2 மாணவர்கள் உயிரிழப்பு - திண்டுக்கல்லில் சரக்கு வேன் மோதி 2 மாணவர்கள் உயிரிழப்பு
திண்டுக்கல்: சரக்கு வேன் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அப்போது, திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்லாதுப்பட்டி பிரிவு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சரக்கு வேன் மாணவர்கள் சென்ற மிதிவண்டிகள் மீது மோதியது. வேன் மோதிய வேகத்தில், 500 மீட்டர் தூரம் மாணவர்கள் சைக்கிளோடு இழுத்துச் செல்லப்பட்டனர். இதில், மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடமதுரை காவல் துறையினர், உயிரிழந்த மாணவர்கள் இருவரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற சரக்கு வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.