தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

2 பேர் மேல் பாய்ந்தது குண்டர் தடுப்புச்சட்டம் - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தூத்துக்குடி எஸ்.பி! - மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி

தூத்துக்குடி: மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Thoothukudi SP Jayakumar
Thoothukudi SP Jayakumar

By

Published : Sep 17, 2020, 6:41 AM IST

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மேலமுடிமண் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி தூத்துக்குடி கணேசன் காலனியைச் சேர்ந்த மதன்(30) என்பவரைக் கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (38) என்பவர் கைது செய்யப்பட்டார்.

மற்றொரு சம்பவமாக கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி புதியம்புத்தூர் பகுதியில் தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் (எ)விஜய் (20), அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து, புதியம்புத்தூர் தெற்கு காலனியைச் சேர்ந்த ராஜன்(54), தங்க மாரியப்பன்(36) ஆகியோரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து புதியம்புத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விஜயகுமார், அவரது நண்பர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர்.

இதையடுத்து, மாரிமுத்து மற்றும் விஜயகுமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். ஆட்சியர் உத்தரவின் பேரில் இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details