திருவள்ளூர் மாவட்டம், பூண்டி கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரது மகன் இமான் மற்றும் ரமேஷ் என்பவரது மகன் சஞ்சய்குமார். இவர்கள் இருவரும் அருகில் உள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு! - Two People Died Drowing In Water
திருவள்ளூர்: பூண்டி அருகே ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அப்போது, தடுமாறி ஏரியில் விழுந்த இமான் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற சஞ்சய்குமார் நீரில் குதித்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் இருவரும் ஆழமான பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர். இதையடுத்து, அருகில் இருந்த பொதுமக்கள் இது தொடர்பாக புல்லரம்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில், உதவி ஆய்வாளர் சிவா தலைமையில் தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி மீனவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாவிற்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.