தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

காஞ்சிபுரத்தில் சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு - Police are investigating the crash

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் மற்றும் சந்தவேலூர் பகுதியில் இன்று(டிச.14) ஒரே நாளில் நடந்த இருவேறு சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

two-killed-in-road-accident-in-kanchipuram
காஞ்சிபுரத்தில் சாலை விபத்தில் இருவர் பலி

By

Published : Dec 14, 2020, 10:27 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகில் பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த அன்புச்செல்வம் (48) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதேபோல் சந்தவேலூர் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (70) என்பவர் சுங்குவார்சத்திரம் சென்றுவிட்டு சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சந்தவேலூர் நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்பாது, அவரது இரு சக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதியதில் பேருந்தின் பின் டயரில் சிக்கி முனியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் சாலை விபத்தில் உயிரிழந்த இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 8 லட்சத்தை கடந்தது கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details