நாகர்கோவிலை அடுத்த இளங்கடை ரஹ்மத் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பாகார் (42). இவர் அதேப்பகுதியில் செல்ஃபோன் கடை நடத்தி வருகிறார். துபாயில் வசிக்கும் தனது மகனை பார்ப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு பாகார் துபாய் சென்றுவிட்டார். வீட்டை அவரது வேலைக்காரர் ஒருவர் பராமரித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவர் வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. அவர் உடனடியாக பாகாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த கோட்டார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகை, 30 கிராம் வெள்ளி, 35 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.