திருச்சிராப்பள்ளி: காவிரி ஆற்றில் மூழ்கிய இருவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், மாயமான 2 சிறுவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
திருச்சி மாவட்டம் முசிறி அந்தரபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது வீட்டிற்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூர், கரூர் மாவட்டத்திலிருந்து உறவினர்கள் வந்துள்ளனர். அதில் கோவை தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் சரவணகுமார் (31), சிறுவர்கள் நித்திஷ்குமார் (15), மிதுனோஷ் (8), ரத்திஷ் (12) ஆகியோருடன் சேர்ந்து 9 பேர் முசிறி காவிரி ஆற்றிலுள்ள பரிசல் துறை பகுதியில் குளித்தனர்.
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பேராசிரியர் சரவணகுமார் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது சிறுவர்கள் நிதிஷ்குமார், ரத்தீஷ், மிதுனேஷ் ஆகியோரும் ஆற்று நீரில் மாயமாகினர். தகவலறிந்த முசிறி தீயணைப்பு மீட்பு படை வீரர்களும், காவல் துறையினரும் காவிரி ஆற்றில் இறங்கி தேடத் தொடங்கினர்.