தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

குளத்தில் நீரில் மூழ்கி சகோதரர்கள் உயிரிழப்பு! - madipakkam police

சென்னை: ஆதம்பாக்கத்தில் குளத்தில் மூழ்கி சகோதரர்கள் இருவர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சகோதரர்கள்
சகோதரர்கள்

By

Published : Feb 8, 2021, 10:27 PM IST

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் காந்திநகர் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் ராஜன். பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன்கள் வினோத்குமார்(14), விஷால்(12), இருவரும் ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9, 7ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று, சகோதரர்கள் இருவரும் புழுதிவாக்கம் அன்னை தெரசா நகரில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற விஷால், திடீரென நீரில் மூழ்கி தத்தளித்துள்ளான். இதைப் பார்த்த வினோத்குமார், தம்பியை காப்பாற்ற முயன்ற போது, அவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இருவரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், மடிப்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். குளித்தில் மூழ்கிய சிறுவர்களின் உடல்களை மீட்ட காவல் துறை, உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:இன்ஸ்டாகிராமில் மார்பிங் செய்த புகைப்படத்தை மாணவிக்கு அனுப்பி மிரட்டிய இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details