தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

இந்த வயதில் மூதாட்டி செய்யும் வேலையை பாருங்க! - சிசிடிவி காட்சிகள் இணைப்பு - coimbatore latest theft news

கோவை: திருவிழா காலங்களில் பொதுமக்களை கண்காணித்து நகை, பணத்தை திருடும் கும்பலை சேர்ந்த மூதாட்டி உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

chain theft

By

Published : Oct 17, 2019, 8:13 PM IST

கோவை ஒப்பனக்காரவீதியில் உள்ள பிரகாசம் பேருந்து நிலையத்தில், கனுவாய் பகுதியைச் சேர்ந்த சுதா என்பவர் பேருந்துக்காக காத்திருந்தபோது, அவருடைய, ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புடைய 39 கிராம், தங்க வளையங்கள் திருட்டுப் போனதாகக் கடைவீதி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.

இச்சம்பவம் குறித்து, கடைவீதி காவல் துறையினரும், தனிப்படை காவல்துறையினரும் விசாரணை நடத்தினர். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்காக பொருத்தப்பட்ட கண்காணிப்பு படக்கருவிகளின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, புகாரளித்த சுதா பின்புறம் 65 வயதுடைய மூதாட்டி சந்தேகிக்கும்படி நடந்து வந்தது தெரியவந்து.

சுங்கச்சாவடிகளின் வருமானம் இருமடங்காக உயரும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பின்னர் பேருந்தில் ஏறும் போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக்கொண்டு பையிலிருந்த தங்கப்பையை அழகாகத் திருடிச் செல்லும் காட்சிகளைக் கண்ட காவல் துறையினர் அசந்துபோனர். அதன்பின்னர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் துடியலூர் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி(65) என்பதும், ரவிச்சந்திரன் என்பவருடன் கூட்டு வைத்துக் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

இந்த வயதில் மூதாட்டி செய்யும் வேலையை பாருங்க! - சிசிடிவி காட்சிகள் இணைப்பு

மேலும், 15 வருடங்களாகப் பண்டிகை காலங்களில் பேருந்துகளுக்காக காத்திருப்பவர்களை குறிவைத்து, கொள்ளை அடிப்பதில் கைதேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இருவரையும் நேற்றிரவு நீதிபதி இல்லத்தில், அவர் முன் முன்னிறுத்திய பின், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details