கும்மிடிப்பூண்டி முனுசாமி நகரில் உள்ள முட்புதர் பகுதியில், தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்து வந்தனர். அதன்படி, இன்று (அக்.17) அப்பகுதியில் இருவர் கஞ்சா விற்று வருவதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், அங்கு விரைந்து சென்ற துணை ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான காவலர்கள், கும்மிடிப்பூண்டி மேட்டுத்தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 23), மற்றும் பெத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
முட்புதரில் மறைந்து கஞ்சா விற்பனை - இருவர் கைது! - திருவள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை கைது செய்த காவல் துறையினர் ஒரு கிலோ கஞ்சாவை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.
arrest
அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், பின்னர் நீதிபதி முன்னிலையில் இருவரையும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: யாரும் செய்யாத தவறை நான் செய்யவில்லை - குடிபோதையில் வாகனம் ஓட்டிய நடிகை பேட்டி