கன்னியாகுமரி: குமரி மாவட்டம், கேரள எல்கை சோதனைச் சாவடியான களியக்காவிளை சோதனைச் சாவடியில், பெங்களூருவில் இருந்து கடத்தப்பட குழந்தைகளை காவல் துறையினர் மீட்டனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் காட்டாகடை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் ஜான். இவரது மனைவி எஸ்தர், இரண்டு குழந்தைகளோடு தமிழ்நாடு - கேரளா எல்லை சோதனைச் சாவடியைத் தாண்டி தமிழ்நாடு செல்ல களியக்காவிளை வந்தனர்.
அந்த நேரத்தில் அவருடன் வந்த பெண் குழந்தை தொடர்ந்து அழுவதைப் பார்த்த பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களைப் பிடித்து விசாரித்தனர். ஆனால், அந்த தம்பதியினர் பெண் குழந்தையானது தங்களுடையது என்றும் உடல் நிலை சரியில்லாததால் அழுகிறது என்றும் தெரிவித்தனர்.
கூட்டுப் பாலியல் வன்புணர்வு: உறவினர்கள் அனுமதியின்றி பெண்ணின் உடலை எரித்த போலீஸார்
இதைத் தொடர்ந்து, காவலர்கள் அவர்களுடன் வந்த ஆறு வயது ஆண் குழந்தையிடம் விசாரணை நடத்தினர். அப்போது, 25 தினங்களுக்கு முன்பு பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியிலிருந்து பெண் குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து, அந்தக் குழந்தையை கடத்தி வந்ததாக அந்த சிறுவன் கூறினார்.
உடனடியாக, அவர்களை களியக்காவிளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், இரண்டு குழந்தைகளையும் நாகர்கோவில் காப்பகத்தில் சேர்த்தனர்.
தொடர்ந்து, அந்த ஆண் குழந்தையும் அவர்களது குழந்தை என்று அந்த தம்பதி தெரிவித்து வருகின்றனர். அந்த குழந்தை அவர்களது குழந்தையா, அல்லது அந்த குழந்தையும் கடத்தல் குழந்தையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர், காவல் துறையினர்.
காதல் திருமணத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூர கொலைகள்: குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை!
அந்த இரண்டு குழந்தைகள் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனிடையே கர்நாடகாவிலிருந்து காணாமல் போன குழந்தையின் தாயார், 'குழந்தையைக் காணவில்லை' என குழந்தையின் புகைப்படத்துடன் அம்மாநில காவல் துறை மூலம் வெளியிட்ட காணொலி வைரலாகியுள்ளது.
குழந்தைக் கடத்தல் கும்பல் சிக்கியது கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பத்ரிநாத், இதுகுறித்து கர்நாடக காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். கர்நாடக காவல் துறையினரும், அந்தக் குழந்தையின் தாயும் அங்கிருந்து களியக்காவிளை வர உள்ளனர். இதனிடையே தக்கலை சரக டிஎஸ்பி ராமசந்திரன் தலைமையில் இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து விசாரணையை காவல் துறையை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.