குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர் சோனாலிஸா என்பவர் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தைச் சேர்ந்த வள்ளிபுரம் கிராமத்தில் பத்து ஏக்கர் நிலம் வைத்து அதற்கு காவலாளியாக விஜயகுமார் என்பவரை நியமித்து பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் ராந்தம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் பெருமாள் என்பவர் திருக்கழுக்குன்ற பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலியான நபரை சோனலிஸா என அடையாளம் காட்டி பத்து ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில் இவரது நிலத்தின்மீது பத்திரப்பதிவு அலுவலகத்தில் வில்லங்கச்சான்று கூறிய சோனலிஸா, அதே நிலத்தை வேறு ஒருவர் பெயரில் காட்டுவதை உணர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்ததின் பேரில் நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி அலெக்சாண்டர் உத்தரவின்பேரில் ஆய்வாளர் அன்புசெல்வி புகார் குறித்து விசாரித்தார்.
இதில், சோனாலிஸாவின் 10 ஏக்கர் நிலத்தை ஒரு கோடியே 90 லட்சத்திற்கு முறைகேட்டில் பலருக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.