தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சென்னையில் கஞ்சா கடத்தல் - இருவர் கைது - கஞ்சா கடத்தல்

சென்னை: அண்ணா நகரில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Ganja

By

Published : Oct 18, 2019, 7:07 PM IST

ஆந்திராவிலிருந்து கஞ்சாவைக் கடத்திவந்து சென்னை அடுத்துள்ள அண்ணா நகரில் பள்ளி மாணவர்களுக்கு சிலர் விற்பனை செய்துவருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், திருநெல்வேலியைச் சேர்ந்த கணேசன் என்பவர்களை திருமங்கலம் காவலர்கள் பிடித்து விசாரணை செய்தனர்.

காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பீர் என்பவர் ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கிவந்து முகமது ரியாஸிடம் கொடுப்பது தெரியவந்தது. மேலும் அவர் அண்ணா நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து கணேசன் என்பவருடன் சேர்ந்து கஞ்சாவை சிறிய பொட்டலங்களாக கட்டி சென்னை முழுவதும் விற்பனை செய்துவந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

சென்னையில் கஞ்சா கடத்தல் - இருவர் கைது

இதனைத் தொடர்ந்து இரண்டு பேரையும் திருமங்கலம் காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து எட்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காவலர் மீது புகார் கொடுக்கவந்தவர்களைத் தாக்கிய துணை கண்காணிப்பாளர்!

ABOUT THE AUTHOR

...view details