தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

வடமாநில கொள்ளை கும்பலைச் சேர்ந்த இருவர் கைது! - Two members arrested for robbery in bus and train

கோவை: ரயில், பேருந்துகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் வடமாநில இளைஞர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தொடர்வண்டி, பேருந்துகளில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடும் இருவர் கைது

By

Published : Oct 2, 2019, 12:46 PM IST

கோவையில் இருந்து பெங்களூரு, சென்னை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளில் வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பல் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக மாநகர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை குற்றப்பிரிவு தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் உத்திரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சகில் அகமது(41), ரியா ஹுயூசைன்(46) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் அண்மை காலமாகவே பேருந்து, ரயில்களில் பணம், நகை உள்ளிட்டவைகளைக் கொள்ளை அடிக்கும் கும்பலைச் சார்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

பின்னர் இருவரும் நேற்றிரவு நீதிபதி இல்லத்தில் ஆஜர் செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் உத்திரப் பிரதேசம் பிஜினூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகமான கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படியுங்க:

செயின் திருட்டில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை பிடித்த பொதுமக்கள்!

ABOUT THE AUTHOR

...view details