தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பள்ளி அருகே கஞ்சா விற்பனை? இருவர் கைது! - கன்னியாகுமரி கஞ்சா

பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் இருவர் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில், மறைத்து வைத்திருந்த மூன்று கிலோ கஞ்சா பிடிப்பட்டது.

two arrested and ganja seized in kanyakumari
two arrested and ganja seized in kanyakumari

By

Published : Oct 18, 2020, 2:26 PM IST

கன்னியாகுமரி: திக்கணங்கோடு அருகே பள்ளி அருகில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

குமரி மாவட்டம், திக்கணங்கோடு, தெங்கன்குழி பகுதியைச் சேர்ந்தவர்கள் குமார் (47), சுகின் (35). இருவரும் கருங்கல் பெத்லகேம் பள்ளி அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கருங்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் அய்யர், அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தார். அதில், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் இருவரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்துள்ளார்.

அப்போது, இருவரிடமும் இருந்து மூன்று கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையிலடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details