இந்த டிஜிட்டல் யுகத்தைக் கலிகாலம் என்றே சொல்லலாம். அதற்கேற்றார்போல் பல சம்பவங்களும் அரங்கேறத்தான் செய்கின்றன. அந்தவகையில், சவுதி அரேபியாவில் வேலைபார்க்கும் தன் கணவர், தன்னை வாட்ஸ்அப் செயலி மூலம் முத்தலாக் செய்தார் என்ற பெண்ணின் வழக்கு திரிபுரா கடம்ட்லா காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தலாக்: வாட்ஸ்அப் மூலம் மனைவிக்கு முத்தலாக்!
திரிபுரா: சவுதியிலிருந்து மனைவிக்கு வாட்ஸ்அப் மூலம் முத்தலாக் கொடுத்த நபர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
முத்தலாக்
இது குறித்து, முஸ்லீம் பாதுகாப்பு உரிமைகள் திருமணச் சட்டம் 2019 இன் கீழ் பெண்ணின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். அரசால் தடைசெய்யப்பட்ட இந்த முத்தலாக் விவகாரத்தில் நபர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் முத்தலாக் அளித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.