திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள முள்ளால் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபு, சுதா தம்பதி. சுதாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த வசந்த் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சுதாவை பார்க்க வசந்த் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
இதை கவனித்த பிரபுவின் தம்பி முரளி நேற்று மாலை வசந்தை கண்டித்து தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த வசந்த் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்து அலறிய முரளியின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.