திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பாய்லர் மிகுமின் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கான கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. இந்த வங்கியில் காசாளர் வைத்துவிட்டு சென்ற ஒரு கோடி 47 லட்ச ரூபாய் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டது.
திருச்சி கூட்டுறவு வங்கி கொள்ளை: சிசிடிவி காட்சி! - Trichy co-operative bank theft, cctv footage
திருச்சி: திருவெறும்பூர் கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளைக்கான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திருச்சி கூட்டறவு வங்கி கொள்ளை: பிரத்யேக சிசிடிவி காட்சி!
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் திவு செய்து அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வங்கிக் கொள்ளை நடந்த சிசிடிவி கேமரா பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்த சிசிடிவி காட்சியில் கொள்ளையர் ஒருவர் மட்டுமே இச்செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர் முகமூடி அணிந்துகொண்டு, அங்க அடையாளங்கள் ஏதும் தெரியாத அளவுக்கு ஜெர்கின் அணிந்து இச்செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.