தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பழங்குடி இன இளைஞரை சுட்ட அடையாளம் தெரியாத நபர்கள் யார்? - நாட்டுத்துப்பாக்கி

கிருஷ்ணகிரி: நாட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்டு பழங்குடி இன இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவரை சுட்ட அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

shoot
shoot

By

Published : Aug 29, 2020, 12:10 PM IST

ஓசூர் அருகேயுள்ள முதிகேரித்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ருத்ரப்பா (25). இவருக்கு முனியம்மா என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். பழங்குடி இனத்தைச் சேர்ந்த ருத்ரப்பா, காடுகளில் பாசி எடுக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை (ஆகஸ்ட் 29) வழக்கம் போல ருத்ரப்பா ஜவளகிரி வனப்பகுதியில் உள்ள பனை காப்புக்காட்டில் பாசி எடுக்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென ருத்ரப்பாவின் வலப்புற இடுப்புப் பகுதியில் பால்ஸ் குண்டுகள் பாய்ந்தன.

இதில் பலத்த காயமடைந்த அவர், அலறித்துடித்து அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். காட்டுப்பகுதிக்குள் அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பழங்குடி இன இளைஞரை சுட்ட அடையாளம் தெரியாத நபர்கள் யார்?

ருத்ரப்பாவை நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள் யார்? அவரைக் கொல்வதற்காக இது நடந்ததா அல்லது வனவிலங்குகளுக்கு குறிவைக்கும்போது எதிர்பாராதவிதமாக அவர் சிக்கினாரா என்பது குறித்து, தேன்கனிக்கோட்டை காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் சிறுவன் கடத்தல்: 3 பேர் துப்பாக்கி முனையில் கைது!

ABOUT THE AUTHOR

...view details