தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கேரள தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை தற்கொலை!

கேரளாவில் தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை தற்கொலை செய்துகொண்டார்.

Transgender suicide suicide in Kerala transgender suicide in Kannur கேரள தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை தற்கொலை திருநங்கை சினேகா
Transgender suicide suicide in Kerala transgender suicide in Kannur கேரள தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை தற்கொலை திருநங்கை சினேகா

By

Published : Feb 10, 2021, 7:55 PM IST

கன்னூர்: திருநங்கை சினேகா தற்கொலை குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அண்மையில் கேரளத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களம் கண்டவர் கன்னூரை சேர்ந்த சினேகா.

இவர், கன்னூரில் உள்ள சமாஜ்வாதி காலனியில் குடியிருந்துவந்தார். இவரின் சொந்த ஊர் தொட்டட்டா பகுதியாகும். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (பிப்.9) சினேகா தனக்கு தானே தீ வைத்துக்கொண்டார்.

இந்நிலையில், சினேகாவின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சினேகா பரிதாபமாக உயிரிழந்தார்.

சினோகாவின் உடல் பரியாரம் மருத்துவக் கல்லூரியில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலக வாயிலில் திருநங்கைகள் திடீர் மோதல் - 5 பேருக்கு லேசான காயம்!

ABOUT THE AUTHOR

...view details