திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவலாங்காடு பழையனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதனும், அவரது நண்பர் சரவணனும் அரசி மூட்டை ஏற்றிக்கொண்டு, பெரிய களக்காட்டூரிலிருந்து சின்னம்மா பேட்டை நோக்கி சென்றனர்.
பைக்கை மீட்க முயன்றபோது விபத்து - இருவர் உயிரிழப்பு - இருவர் பலி
திருவள்ளூர்: திருத்தணி அருகே ரயில் தண்டவாளத்தில் சிக்கிய பைக்கை மீட்க முயன்ற இருவர் மீது ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அப்போது, திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது, தண்டவாளத்திற்கு இடையே உள்ள கற்களில் பைக்கின் டயர் சிக்கியது. இதையடுத்து இருவரும் அரிசி மூட்டையுடன் இருந்த பைக்கை மீட்க முயன்றனர். அப்போது, பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில், பைக் மீது மோதியதில் இருவரும் 500 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.