மதுரை வாழைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி. பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, சாராய கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மதுரையில் பட்டப்பகலில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை - madurai
மதுரை: பிரபல ரவுடியை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் மீனாட்சியம்மன் கோயில் தெற்கு வாசல் பகுதியில் அவர் சென்று கொண்டிருந்த போது, அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த பால்பாண்டியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். பட்டபகலில் பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.