சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் முத்து கிருஷ்ணவேணி. இவர் கடந்த ஒன்றாம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது இவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதனை இவரது கணவர் ராதாகிருஷ்ணன் எடுத்துப் பேசியுள்ளார். அப்போது எதிர் முனையில் பேசிய அடையாளம் தெரியாத நபர் கிருஷ்ணவேணி கணக்கு வைத்துள்ள பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து (SBI) பேசுவதாக கூறி வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார்.
போலீசிடமே ஆட்டயபோட்ட 'ஜெகஜால கில்லாடி' திருடன்! - சென்னை
சென்னை: வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியம் பெண் காவலரின் வங்கி கணக்கில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நூதன முறையில் 10 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளார்.
இதனை நம்பி ராதாகிருஷ்ணன் வங்கி கணக்கு எண் மற்றும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) ஆகியவற்றை கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 9,998 ரூபாயை அடையாளம் தெரியாத நபர் எடுத்துள்ளார். இது குறித்து வில்லிவாக்கம் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று காவல் துறையினர் பல்வேறு கருத்துகள் தெரிவித்துவரும் நிலையில் காவல் துறையினரின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.