திருப்பூர் மாவட்டம் அப்பாச்சி நகர்ப் பகுதியில் ஏசி விற்பனை மற்றும் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருபவர் பாலமணி (27). இவர் தனது அலுவலகத்திலிருந்து சர்வீஸ் சென்டருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது தனது செல்ஃபோன், பணப்பை ஆகியவற்றை வாகனத்தின் உள்ளே வைத்துப் பூட்டி விட்டுச் சென்றுள்ளார்.
அதன் பின், சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தின் உள் வைத்திருந்த பணப்பையை காணாமல் தேடியுள்ளார். அப்பொழுது சிறிது தூரத்தில் உள்ள மற்றொரு நிறுவனத்தின் காவலர், இவரது பணப்பையை அடையாளம் கண்டு கொடுத்துள்ளார். பின்னர் பணப்பையைத் திறந்து பார்த்த பொழுது, அதில் இருந்த 9 ஆயிரத்து 500 ரூபாய் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த பணப்பையை எடுத்து, பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது. இதுகுறித்து, பாலமணி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இருசக்கரத்தில் பணம் திருடும் சிசிடிவி காட்சி அதனடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் உள்ள பூட்டுகள் மிகவும் சாதாரணமாக இருப்பதால் அவற்றில் விலை உயர்ந்த பொருட்கள், பணம் ஆகியவற்றை வைக்க வேண்டாம் எனவும், பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் உடைமைகளைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் எனவும் காவல் துறையினர் எச்சரிக்கை மக்களுக்கு விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தொடர் வங்கி விடுமுறை எதிரொலி - நைசாக புகுந்த கொள்ளையர்கள்!