ஆயுதக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிந்த கைதி நபீரின் சிறை தண்டனை கடந்த புதன்கிழமையுடன் முடிவடைந்தது.
இதனையடுத்து நபீர் டெல்லியில் உள்ள கர்கர்டூமா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி ரிச்சா பரஷார் முன்னிலையில் நபீர் தன் சட்டையைக் கழற்றி தன் முதுகில் இருந்த 'ஓம்' என்ற தழும்பைக் காண்பித்துள்ளார்.