பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் லேசாக மழை பெய்யது வருகிறது. மாலை நேரத்தில் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், நகர்ப்புற பகுதிகள், வேப்பந்தட்டை, வாலிகண்டபுரம், சிறுவாச்சூர், அம்மாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
பெரம்பலூரில் இடி தாக்கி பெண் உயிரிழப்பு - Heavy Rain In perambalur
பெரம்பலூர்: இடிதாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
thunder Storm Attacked women dead
வேப்பந்தட்டை அருகே உள்ள பெருநிலா கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரனின் மனைவி கவிதா. இவர் நேற்று மாலை மாட்டுக் கொட்டகைக்கு பால் கறக்க சென்றுள்ளார். அப்போது, கவிதா மீது இடி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, கவிதாவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடிதாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கொல்லிமலை பகுதியில் இடி தாக்கி விவசாயி படுகாயம்
Last Updated : Oct 17, 2019, 6:42 PM IST