தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

தீவிரவாதிகளுக்கு உதவிய வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்! - எழும்பூர் நீதிமன்றம்

சென்னை: பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பேரை தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

ajar
ajar

By

Published : Jan 20, 2020, 5:57 PM IST

இந்து முன்னணி நிர்வாகி கொலையில் ஈடுபட்டோருக்கு உதவிய வழக்கில் பெங்களூரில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான், ஹனிப் கான் மற்றும் முகமது சையது ஆகியோருக்கு 10 நாள் போலீஸ் காவல் முடிந்ததையடுத்து, தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இவர்கள் மூவரையும், எழும்பூர் நீதித்துறை நடுவர் ரோஸ்லின் வரும் பிப்ரவரி 3ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த மூவரும் தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு மற்றும் போலி பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வில்சன் கொலை வழக்கு: நாளை தீர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details