தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பன்றி பண்ணை உரிமையாளர்கள் மூவர் படுகொலை! கொள்ளையர்கள் அட்டூழியம்? - கர்நாடக செய்திகள்

கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த நயகனஹட்டி கிராமத்தில் பன்றி பண்ணை வைத்திருந்த மூன்று பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். பன்றிகளை திருட வந்த கொள்ளையர்கள் இந்தக் கொடூர கொலை சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

latest crime news
latest crime news

By

Published : Aug 17, 2020, 7:48 PM IST

சித்ரதுர்கா (கர்நாடகம்): பன்றி பண்ணை வைத்திருக்கும் மூவரை அடையாளம் தெரியாத நபர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

சித்திரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த நயகனஹட்டி கிராமத்தில் பன்றி பண்ணை வைத்திருந்த மரேஷ்(50), யாலேஷா(30), சீனப்பா(30) ஆகிய மூவர் தான் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் தலையில் கல்லை வைத்து அடித்து கொடூரமாகக் கொன்றுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தந்தை: ஆத்திரத்தில் கொலை செய்த மகன்கள்!

பன்றிகளை திருட வந்த கும்பலை தடுக்கும் போது ஏற்பட்ட மோதலில் குற்றவாளிகள் இவர்கள் மூவரையும் கொலை செய்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தடையங்களை சேகரித்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details