தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சவுகார்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை...! - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை

சென்னை: சவுகார்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

three-murder
three-murder

By

Published : Nov 11, 2020, 10:33 PM IST

ராஜஸ்தான் மாநிலம் பிரோகி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் தலில்சந்த்(74). இவரது மனைவி புஷ்பா பாய் (70). இவர்களுக்கு சீத்தல்(38) என்ற மகனும், பிங்கி என்ற மகளும் உள்ளனர். இவர்கள், சென்னை சவுகார்பேட்டையில் உள்ள விநாயகர் மேஸ்திரி தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.
தலில்சந்த சவுகார்பேட்டையில் ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்தார். மகள் பிங்கி, அவரது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், மகள் பிங்கி இன்று (நவம்பர் 11) இரவு தனது தந்தை வீட்டுக்கு வந்தார். அப்போது, தந்தை தலில்சந்த், தாய் புஷ்பா, சீத்தல் ஆகியோர் கழுத்தறுக்கப்பட்டும் துப்பாக்கியால் சுடப்பட்டும் கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், யானைகவுனி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், கொலை குறித்து விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில், உறவினருக்கும் தலில்சந்த் குடும்பத்தினருக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. மேலும், தலில்சந்த ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்ததால் கொடுக்கல், வாங்கல் பிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், காவல் ஆணையர், கூடுதல் ஆணையர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கொலை செய்து விட்டு தப்பியோடிய கும்பலை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details