தெலங்கானாவின் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்திலுள்ள காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக காவல் கண்காணிப்பாளர் சுனில் டட் உத்தவின் பேரில் காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
சென்னாபுரம் என்கவுன்ட்டர்: மூன்று மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை! - latest maoist news
ஹைதராபாத் : காவல் துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
Three Maoists killed in Chennapuram encounter
இதில் வனப்பகுதிகளில் சுற்றித்திரிந்த மூன்று மாவோயிஸ்டுகளை காவல் துறையினர் சுற்றிவளைத்தனர். ஆனால் காவல் துறையினரிடமிருந்து தப்பிக்க மாவோயிஸ்டுகள் காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதற்கு காவலர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 8மிமீ ரைஃபுள் துப்பாக்கி, வெடிப்பொருட்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.